இவ்வருடமும் மாகாண சபைத் தேர்தல் இல்லை!
நீண்ட காலமாக இழுபறியிலுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த வருடமும் நடைபெறாது என்பது உறுதியாகியுள்ளது.
'த மோர்னிங்' ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் பேசிய அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில,
1988 ஆம் ஆண்டின் எண் 2 மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் இதுவரை திருத்தம் மேற்கொள்ளப்படாததால், மாகாண சபை தேர்தல் இந்த வருடத்துக்குள் நடைபெற வாய்ப்பில்லை என்றும், பெரும்பாலும் 2022 இல் நடைபெறும் வாய்ப்புகளே இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவில் இந்த விவகாரம் சம்பந்தமாக ஒரு இறுதி முடிவை எட்டுவோம் என்று நம்புகின்றோம் என்றும், எதிர்வரும் 19 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள அரச பங்காளிகளின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் அமைச்சர் கம்மன்பில கூறியுள்ளார்.
இதேபோல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், பெரும்பாலும் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam