கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் பொலிஸாருக்கு வியப்பை ஏற்படுத்திய யாசகர்
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் ஆராய்ச்சிகட்டுவ, ஆனவிழுந்தாவ பெற்றோல் நிலையத்துக்கு அருகில் மோட்டர் சைக்கிளில் மோதி காயமுற்ற யாசகரின் இடுப்பில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
யாசகரிடம் பணத்துக்கு மேலதிகமாக 5 வங்கி கணக்கு
குறித்த யாசகரிடம் பணத்துக்கு மேலதிகமாக 5 வங்கி கணக்கு புத்தகங்களும் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாசகரை ஆராய்ச்சிகட்டுவ பிரதேச இளைஞர்கள் மீட்டு, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மோதி காயமுற்ற யாசகர் எனக் கூறப்படும் நபர் சுமார் 65 வயதானவர் என கூறப்படுகின்றது.
அத்துடன் அவரிடமிருந்து எடுத்த பணத்தை பொலிஸ் அதிகாரியின் முன்னால் எண்ணப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
யாசகரிடம் இருந்து பணம் பொலிசாருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.