டயானா கமகேயின் குடியுரிமை விவகாரம் தொடர்பில் மனு தாக்கல்
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேயின் குடியுரிமை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு தொடர்பில்,வழக்கின் தேசிய முக்கியத்துவம் கருதி, ஐந்து நீதியரசர்கள் அடங்கிய முழுமையான அமர்வு மனுவை விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இந்த மனுவை எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி விசாரிக்க வேண்டும் என்று
மனுதாரரான சமூக ஆர்வலர் ஓசல ஹேரத் கோரியுள்ளார்.
இந்த நீதிப்பேராணை மனுவில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே
பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க
தகுதியற்றவர் என அறிவிக்க உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியுள்ளார்.





படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam
