வட கொரியாவுடன் இணைந்து செயற்பட சீனா தயார் : ஜி ஜின்பிங் அறிவிப்பு
உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து செயற்பட சீனா தயார் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியுள்ளார் என வட கொரியாவின் கொரிய மத்திய செய்திச் சேவை இன்று தெரிவித்துள்ளது.
சீன ஜனாதிபதியின் 3ஆவது பதவிக்காலத்துக்கு ஜி ஜின்பிங் தெரிவுசெய்யப்பட்டமைக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு அனுப்பிய பதிலில சீன ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக அமைதி
'பிராந்தியத்தினதும் உலகினதும் அமைதி, ஸ்திரத்தன்மை, அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்துக்காக வடகொரியாவுடன் இணைந்து செயற்பட சீனா தயாராகவுள்ளது' சீன ஜனாதிபதி தெரிவித்தார் என கொரிய மத்திய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உட்பட நீண்ட தூர ஏவுகணைகள் பலவற்றை வட கொரியா பரிசீலித்து சில நாட்களில் சீன ஜனாதிபதியின் இச்செய்தி வெளியாகியுள்ளது.
அணுவாயுத பரிசோதனை
இறுதியாக 2017 ஆம் ஆண்டில் தனது 6 ஆவது அணுவாயுத பரிசோதனையை வடகொரியா நடத்தியது. அண்மைய நாட்களில் பெரும் எண்ணிக்கையான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்த நிலையில், தனது 7 ஆவது அணுவாயுத சோதனையையும் வடகொரியா நடத்தக்கூடும் என்ற அச்சமும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா எதிர் நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. அதேபால சீனாவும், அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருப்பதால் அமெரிக்காவுக்கு எதிராக உலக நாடுகளை சீனா ஒருங்கிணைக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது
அமெரிக்கா
சமீபத்தில் நடந்து முடிந்த G20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா, சீனாவிடம் இந்த ஏவுகணை சோதனை விவகாரம் குறித்து பேசியிருந்தது.
மேலும், வடகொரியாவை சீனா தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதிபர் பைடன் வலியுறுத்தியிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் வடகொரியாவுக்கு ஆதரவாக சீனா கடிதம் எழுதியிருப்பது அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதேபோல ஐ. நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையும் சீனா தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது.
அதற்கும் முன்னதாக கடந்த மே மாதம் இதேபோல வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தீர்மானத்தைத கொண்டு வந்திருந்தது.
இதனை ரஷ்யாவும், சீனாவும் சேர்ந்து தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
