டுவிட்டர் தலைமையகத்திலிருந்து அகற்றப்பட்ட “எக்ஸ்” சின்னம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு டுவிட்டர் நிறுவனம் செயல்பட்டுவருகின்றது.
இந்த நிறுவனத்தை உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
டுவிட்டர் செயலியின் பெயரை “எக்ஸ்”என மாற்றியுள்ளார்.
அதேபோல் பல ஆண்டுகளாக அதன் அடையாளமாக இருந்த நீலப்பறவையை மாற்றி “எக்ஸ்”என்ற சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.
முறைப்பாடுகள்
இந்தநிலையில் “எக்ஸ்”என்ற ஒளிரும் சின்னம் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால் இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக ஒரே நாளில் 24 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும் நகர நிர்வாகத்திடம் இதற்கு உரிய அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |