எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு - செய்திகளின் தொகுப்பு
இலங்கைக் கடற்பரப்பிற்குள் தீப்பற்றி விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேறிய கழிவுகளை அகற்றுவதற்காக செலவிடப்பட்ட தொகை தொடர்பில் இலங்கை கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.
மன்னாரிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலான கடற்கரைப் பிரதேசங்களில் இருந்து பிளாஸ்டிக், இரசாயன பொருள்களை அகற்றி சுத்தம் செய்வதற்கு ஒன்பது கோடியே முப்பத்தி எட்டு இலட்சத்து ஐம்பத்து ஏழாயிரத்து இருநூற்று தொண்ணூற்று மூன்று ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கரையோரத்தை சுத்தம் செய்ய இன்னும் பல வருடங்கள் தேவை
மூழ்கிய கப்பலின் கொள்கலன்களில் இருந்து வெளிவந்த பிளாஸ்டிக் மற்றும் இரசாயன பொருட்களை அகற்றி இந்த நாட்டின் கரையோரத்தை முழுமையாக சுத்தப்படுத்த இன்னும் பல வருடங்கள் ஆகும் எனவும் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
கப்பலில் இருந்து கடலில் கலந்த 1600 மெற்றிக் தொன் பிளாஸ்டிக்குகள் மற்றும் இரசாயனங்கள் பமுனுகம பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட களஞ்சியசாலைகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் சட்ட ஆலோசனையின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றை காலை நேர செய்திகளின் தொகுப்பு,