எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம்: வழக்கை சிங்கப்பூருக்கு மாற்ற உடன்பாடு
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் வழக்கை சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்திற்கு மாற்ற எக்ஸ்பிரஸ் பேர்ள் ஷிப்பிங் நிறுவனம் உடன்பாட்டை எட்டியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, நிபந்தனையற்ற உடன்படிக்கையின் கீழ், சிங்கப்பூரில், இலங்கை அரசாங்கம் இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கு ஆவணங்களை, நீதிமன்ற விசாரணையின் போது ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவணங்களை வழங்கல்
இதன்படி எதிர்வரும் 14ம் திகதி ஆவணங்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்கிடையில் எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரழிவால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்க அமைச்சரவையின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவின் பிரதிநிதிகள் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைக்காக ஜூலை 17ஆம் திகதி சிங்கப்பூர் செல்ல உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
