தீப்பிடித்த கப்பலின் மாலுமி அனுப்பிய மின்னஞ்சல்களை இலங்கை முகவர் நிறுவனம் அழித்துள்ளதாக தகவல்

Colombo Fire Court Ship Colombo Harbour
By Steephen Jun 08, 2021 05:40 AM GMT
Report

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றி எரிந்து கடலுக்குள் மூழ்கி கொண்டிருக்கும் எக்ஸ் - பிரஸ் பேர்ள் கப்பலின் மாலுமி, அந்த கப்பல் நிறுவனத்தின் இலங்கை முகவர் நிறுவனத்திற்கு அனுப்பிய சில மின்னஞ்சல்களை அந்த நிறுவனம் அழித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

கப்பலில் தீ ஏற்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் கப்பலில் இருந்த கொள்கலன் ஒன்றில் இருந்து நைற்ரிக் அமிலம் கசிந்துள்ளதாக மாலுமி உட்பட கப்பல் ஊழியர்கள் தெரியப்படுத்தி இருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

கப்பலின் மாலுமி இது குறித்து தெரியப்படுத்திய மின்னஞ்சல்களை இலங்கை முகவர் நிறுவனம் அழித்துள்ளது என்பது இதுவரை பெற்றுக் கொண்ட வாக்குமூலங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நிலைமை இப்படி இருக்கும் போது, கப்பல் பாதுகாப்பாக இருப்பதாகவும், அதில் ஆபத்துக்கள் எதுவும் இல்லை என்பதால், கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு வர அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது எனவும் மாதவ தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மே 19ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அறிவித்திருந்த அந்த நிறுவனம் 20ஆம் திகதி காலையில் கப்பலில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக மீண்டும் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவித்துள்ளது.

உண்மையை மறைத்து ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட தகவல்களை வழங்கி, அந்த கப்பல் நிறுவனத்தின் தேசிய முகவர் நிறுவனமான சீ.கோன்சோடியம் லங்கா தனியார் நிறுவனம் செயற்பட்டுள்ளதால், அந்த நிறுவனத்தின் முகாமையாளரான அர்ஜூன ஹெட்டியராச்சி உட்பட 7 பேரை சந்தேகநபர்களாக பெயரிடுமாறும், அவர்களுக்கு அறிவிப்பாணை அனுப்புமாறும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட கப்பலின் மாலுமி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு இல்லை எனவும் மேல் நீதிமன்றத்திற்கே விசாரிக்கும் அதிகாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் ஷலனி பெரேரா, சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய அறிவிப்பாணை விடுக்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு இல்லை எனக் கூறியுள்ளார்.

எனினும் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த ஏனைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதவான், அந்த கப்பல் தற்போது இருக்கும் பிரதேசத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு கடற்படை தளபதிக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் விபத்து ஏற்பட்ட போது கப்பலின் மாலுமி மற்றும் இலங்கை முகவர் நிறுவனத்திற்கு இடையில் பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள் குறித்து விசாரணை நடத்தி, அந்த மின்னஞ்சல்களின் தரவுகளை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வழங்குமாறு நிறுவனத்தின் முகாமையாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வி.டி.ஆர் இயந்திரத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை ஒன்றை பெற நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான், குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US