இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த கப்பல் - சேதத்திற்கு இழப்பீடு பெற நடவடிக்கை
அனர்த்தத்திற்குள்ளான எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலினால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு பெற்றுக்கொள்வதற்கு தேவையான தரவுகள் சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டிற்கு விரைவாக இழப்பீட்டை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, காக்கைத்தீவு, பமுனுகம, சரக்குவ மற்றும் நீர்கொழும்பு கடற்கரையோரங்களைத் தவிர ஹிக்கடுவ கடற்கரையிலும் தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்ததாகக் கருதப்படும் பல பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.
இந்த நிலையில் கடற்படை, கரையோரப் பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்டோர் பொருட்களை அப்புறப்படுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், நச்சுப்பொருட்கள் அடங்கிய இரண்டு கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் இருந்தமை தொடர்பாக சர்வதேச பொலிஸார் அறிந்திருந்ததாக ரியாத்தின் பிரின்சஸ் நவுரா பல்கலைக்கழக ஆய்வுத் திணைக்களத்தின் பேராசிரியர் சந்திமா விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தொகுப்பு காணொளி வடிவில்,
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam