முடிவுக்கு வந்தது அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் போராட்டம்
மூன்று காரணிகள் காரணமாக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இடைநிறுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தமது மத்திய குழு இதனை சம்மேளனத்தின் தீர்மானித்துள்ளதாக, உதவிச் செயலாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
தமது போராட்டம் தொடர்பில், சுகாதார அமைச்சிலிருந்து தங்களுக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளதாகவும், அதில், தரப்பிலிருந்து தவறு நடந்துள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிறிஸ்மஸ் பண்டிகை காலம் என்பதாலும் தாம்,தமது போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
எனினும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க 2022 ஜனவரி 03 ஆம் திகதி ஒரு முக்கியமான கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக சமந்த ஆனந்த குறிப்பிட்டுள்ளார்
சுகாதார அமைச்சின் செயலாளரின் தன்னிச்சையான நடவடிக்கை உட்பட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை (21) முதல் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.