போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அப்பாவி பிள்ளைகளை தண்டிப்பது தவறு - நாமல் ராஜபக்ச

Galle Face Protest Namal Rajapaksa Sri Lanka Violence 2022 Sri Lanka Anti-Govt Protest
By Steephen Oct 03, 2022 04:45 AM GMT
Report

போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அப்பாவி பிள்ளைகள் இருப்பதாகவும் அந்த பிள்ளைகளை விளக்கமறியலில் வைத்து பொலிஸ் அறிக்கையை வழங்கி, அவர்கள் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளவிருக்கும் சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்வது தவறு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு செயலகம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் வெலிமடையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாமல் இதனை கூறியுள்ளார்.

போராட்டத்தை வழி நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

நாமல் ராஜபக்ச-Namal Rajapaksa

போராட்டத்தை வழி நடத்தியவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உதவி, ஒத்தாசைகளை வழங்கியவர்களுக்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

எனினும் போராட்டம் என்ற அலைக்கு ஏமாந்து சென்ற பல பிள்ளைகளை உள்ளனர்.தவறாக வழிநடத்தப்பட்ட பல பிள்ளைகள் இருக்கின்றனர். போராட்டத்தை பார்க்க சென்ற பலரும் இருக்கின்றனர்.

இவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரயோசனமில்லை.போராட்டம் என்ற அலை காரணமாக அதில் கலந்துக்கொண்ட பிள்ளைகளை வெறுமனே கைது செய்து சிறையில் அடைப்பது பலனளிக்காத விடயம்.

வழி தவறிய இளைஞர்களை வேலைத்திட்டத்தின் ஊடாக சமூகமயப்படுத்த வேண்டும்

இலங்கை ஆர்ப்பாட்டம்-Sri Lanka Protest

இந்த பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு செல்ல பொலிஸ் அறிக்கைகளை பெற முடியாத நிலைமையை ஏற்படுத்தினால், அது நியாயமானது அல்ல.இதனால், போராட்டத்திற்கு ஏமாந்து வழி தவறிய இளைஞர்களை ஒரு வேலைத்திட்டத்தின் ஊடாக சமூகமயப்படுத்த வேண்டும்.

நாட்டில் சுதந்திரம் இருப்பது போல் நாட்டை பாதுகாப்பான நாடாக மாற்ற வேண்டும். எதிர்க்கட்சித்தலைவர் மீது தாக்குதல் நடத்தியதை நாம் கடந்த காலத்தில் பார்த்தோம். எமது வீடுகளை தீயிட்டால் பரவாயில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவரையும் தாக்கினர்.

நாமல் ராஜபக்ச-Namal Rajapaksa

கொள்ளைச் சம்பவங்கள், கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதுடன் பாதாள உலக குழுவினர் தலைதூக்கியுள்ளனர். இவற்றை அடக்கி ஒடுக்கவில்லை என்றால் இந்த நாடு என்றுமே பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்ல முடியாது.

தமது வீடு, தமது மனைவியின் வீடு, தமது தந்தையின் வீடு உட்பட வீடுகளுக்கு தீவைக்கும் சம்பவங்களை வழிநடத்திய நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US