பொலிஸ் உயர் அதிகாரி கழுத்தில் பிடித்தமை தவறில்லை..! பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் கூறியுள்ளதாக தகவல்
பொலிஸ் உயர் அதிகாரி கழுத்தில் பிடித்தமை தவறில்லை என பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றின் போது உயர் பொலிஸ் அதிகாரியொருவர் இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை கழுத்தில் பிடித்து தள்ளும் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பாதிக்கப்பட்ட உத்தியஸ்தர்களின் வாக்குமூலம்
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களும் வாக்குமூலம் அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
உயர் அதிகாரியின் செயற்பாட்டினால் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதேவேளை, கடமையில் ஈடுபடுவதனை ஊக்கப்படுத்தும் நோக்கில் தாம் இரு உத்தியோகத்தர்களையும் கழுத்தில் பிடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த பிரதம பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
