அரசியல் வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவு! - மங்கள குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்
கோவிட் தொற்று காரணமாக அண்மையில் உயிரிழந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கடைசி நாட்களில் பங்கேற்ற நேர்காணல்கள் தற்போது வெளியாகின்றன.
இதில் தனது அரசியல் வாழ்கையில் எடுத்த தவறான முடிவுகள் குறித்து மங்கள சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“ஐக்கிய தேசியக் கட்சி போன்ற நாட்டின் மிகப் பெரிய அரசியல் கட்சி பிளவுபடுவதைத் தடுக்க கடைசி தருணம் வரை போராடியதாகவும், அதைத் தடுக்க இயலாமை தோல்வி என்றும் மங்கள குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டிருப்பது மிகவும் வருத்தமளிப்பதாகவும், அவ்வாறு இல்லாதிருந்தால் இந்த அரசாங்கம் இருந்திருக்காது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த முக்கிய தவறுகள் மற்றும் துரதிருஷ்டவசமான முடிவுகளில் இதுவும் ஒன்று என மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.