இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி! கர்ப்பிணிப் பெண்கள் பெரிதும் பாதிப்பு: ஐக்கிய நாடுகள் சபை
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார கட்டமைப்பை வீழ்ச்சியின் இறுதிக்கட்டத்துக்கு இட்டுச் சென்றுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக - பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உள்ளது எனவும், இந்த நிலைமை கர்ப்பிணிப் பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு

மின் உபகரணங்கள், மருந்துப் பற்றாக்குறை என்பன காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் கர்ப்பிணிப் பெண்கள் போஷாக்கற்ற உணவு மற்றும் உணவுத்
தட்டுப்பாட்டால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் ஐக்கிய நாடுகள்
சபை மேலும் தெரிவித்துள்ளது.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri