எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின் இலங்கை மக்களுக்கு மோசமான நெருக்கடிகள்! பகிரங்க எச்சரிக்கை
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நாட்டு மக்களுக்கு பொருளாதார ரீதியில் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படுமென முன்னாள் அமைச்சரும், சுயாதீன எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எச்சரித்துள்ளார்.
வரி அதிகரிப்பு நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமல் அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கு நடுத்தர மக்களை பலியாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,