மோசமடையும் நாட்டு நிலைமை: இலங்கையை விட்டு வெளியேறும் சுற்றுலாப்பயணிகள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை நிறுத்தியுள்ளதாகச் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டால் டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்கள் மூலமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என விடுதி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
நாட்டுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளின் பயணங்களுக்கு எரிபொருளை வழங்க முஃடியாமையால் யால மற்றும் ஏனைய பூங்காக்களின் இயக்க வேகம் குறைந்துள்ளன.
அத்துடன் விடுதிகளில் உணவு தயாரிப்பதற்கு எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவு தயாரிப்பதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான சிக்கல் நிலையினாலேயே சுற்றுலாப் பயணிகள் விரக்தியுடன் இலங்கையை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும், இது சுற்றுலாத்துறைக்குப் பலத்த அடியாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri
