இலங்கைக்கு வந்துள்ள ருவண்டா நாட்டை சேர்ந்த படைப்புழு தொடர்பான வல்லுநர்கள்
ருவண்டா நாட்டைச் சேர்ந்த படைப்புழு தொடர்பான வல்லுநர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அவர்கள் படைப்புழு தொடர்பான தங்கள் கண்டுபிடிப்புகள் குறித்து இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுடன் விவாதித்துள்ளனர்.
இந்த தகவலை இலங்கை இராணுவத்தின் ஊடக பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இலங்கையின் வட மத்திய மாகாணத்திலும் பிற இடங்களிலும் மக்காச்சோளப் பயிர்செய்கையில் சேனா அந்துப்பூச்சி, கம்பளிப்பூச்சி போன்றவை பரவி பயிர்செய்கையை நாசப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் அவற்றை விஞ்ஞான நிபுணத்துவத்துடன் கட்டுப்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆராயும் நோக்கில் ருவண்டாவிலிருந்து இந்த சிறப்புத் தூதுக்குழு இலங்கைக்கு வந்துள்ளது.
இந்த குழுவில் ருவண்டாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், விவசாய வல்லுநர்கள் மற்றும் பூச்சி கட்டுப்பாடு நிபுணர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இராணுவத் தளபதியுடனான சந்திப்பின்போது ருவண்டாவின் நிபுணர்கள் தங்கள் நாட்டில் பூச்சியைக் கட்டுப்படுத்துவதில் தமக்குள்ள அனுபவங்களை முன்வைத்தனர்.
இலங்கையில் இந்த படைப்புழுக்களை ஒழிக்க தமது ஒத்துழைப்பை வழங்கவும் அவர்கள் இணங்கியதாக இலங்கையின் இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.