சர்வதேச ரீதியாக அநுர அரசுக்கு பெரும் தடைகள்..!
இலங்கை போன்ற சிறிய நாடு அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியாக மோதினால் பாரிய இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் மிக முக்கியமான நாடு அமெரிக்காவாகும்.
எனினும் இலங்கை இறக்குமதி செய்யும் பொருட்களில் 25சதவீதமானவை இந்தியாவிலிருந்து தான் வருகின்றன.
எனவே ஏற்றுமதி இறக்குமதி தொடர்பில் இந்தியா- சீனாவை எவ்வாறு கையாளுகின்றதோ அதில் தான் இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது என சுட்டிக்காட்டினார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
