இயக்கச்சியில் பலரையும் பிரமிக்க வைக்கும் தாஜ்மஹால்-ஈபிள் கோபுரம்(Video)
இலங்கையில், உலக அதிசயங்கள் அனைத்தையும் பார்ப்பதற்கான வாய்ப்பு புலம்பெயர் தொழிலதிபரின் முயற்சியில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
சுமார் 150 ஏக்கருக்கு மேற்பட்ட இடப்பரப்பில், 250 பணியாளர்களுடன் மிகப்பெரிய வடக்கின் பொழுதுபோக்கு மையம் என தயங்காது மக்கள் இதனை குறிப்பிடும் அளவிற்கு பல மாற்றங்கள் றீ(ச்)ஷா பண்ணையில் ஏற்பட்டுள்ளது.
றீ(ச்)ஷா பண்ணை பல ஆயிரக்கணக்கிலான தென்னை மரங்கள் சூழ மிக அழகாக காட்சியளிக்கும். தற்போது இந்த பண்ணையில் அனைத்து உலக அதிசயங்களின் மாதிரி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனை பார்க்க மக்கள் அதிகளவில் வருகை தருவதுடன் மிகவும் மகிழ்ச்சியாக தமது பொழுதை கழிக்கின்றனர்.
மேலும் வட பகுதியில் பல புகழ்பெற்ற உணவகங்கள் இருந்த போதும் அவற்றை விட சாப்பாடு மிகுந்த சுவையாக இருந்தது எனவும் றீ(ச்)ஷா பண்ணையில் உணவருந்திய மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பலரையும் ஈர்த்த றீ(ச்)ஷா பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள உலக அதிசயங்களின் மாதிரி உருவங்கள் தொடர்பான விடயங்களை இந்த காணொளியில் காணலாம்.