ஜேர்மனியில் திடீரென வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்! வெளியான காரணம்
ஜேர்மனியின் ஹானோவர் நகரில் இரண்டாம் உலகபோர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, சுமார் 8,100 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
குறித்த வெடிகுண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்வதற்காக ஹானோவர் நகரில் வாழ்ந்த சுமார் 8,100 பேர், தங்களுக்கு தேவையான உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
வெடிகுண்டு புகைப்படம்
பின்னர் வெடிகுண்டை செயலிழக்க செய்ததும், தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து, மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதன்போது அந்த வெடிகுண்டு பாதுகாப்பான முறையில் செயலிழக்க செய்யப்பட்டதை தொடர்ந்து, ஹானோவர் தீயணைப்பு துறையினர் அது தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Hier noch ein Bild von der Sprengstelle der 500 kg Fliegerbombe #hannbombe #einsatzfürhannover pic.twitter.com/ZwEoFH3J6g
— Feuerwehr Hannover (@Feuerwehr_H) June 18, 2023
வானிலிருந்து வீசப்பட்ட இந்த குண்டு 500 கிலோகிராம் எடையுள்ளதாக இருந்ததுடன், அதனுடனேயே வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் ஃபியூஸும் இருந்ததால், அதை செயலிழக்க செய்வது சற்று சிக்கலான விடயமாக இருந்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
