தாய்லாந்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு! 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி
தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தாய்லாந்தின் வட கிழக்கு மாகாணமான நாங் புவா லாம்புவின் தலைநகரில் நிகழ்ந்துள்ளது.
பயங்கர துப்பாக்கிச் சூடு
காவல்துறையைச் சேர்ந்த முன்னாள் காவலரான பன்யா கம்ராப் என்பவர், குழந்தைகள் காப்பகத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
34 பேர் பலி
இதில், 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், ஆசிரியர்கள், குழந்தை பராமரிப்பு மையத்தின் அதிகாரிகள் 12 பேர் என மொத்தமாக 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இறுதியில், தாக்குதலில் ஈடுபட்ட பன்யா கம்ராப்பும் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தாய்லாந்து பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
