கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முதன்முறையாக வந்த சிறப்புமிக்க புதிய விமானம்
உலகின் புதிய பயணிகள் விமானம் இன்று காலை முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் போயிங் 787-10 ரக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் ட்ரீம்லைனர் விமானப் பிரிவின் கீழ் புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம், ஒரே நேரத்தில் 337 பயணிகள் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 36 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 301 சாதாரண வகுப்பு இருக்கைகள் உள்ளன.
இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக ஓடுபாதை மற்றும் விமானங்களை நிறுத்தும் தளத்தின் சிறப்பு வசதிகளை விரிவுபடுத்தவும் விமான நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 23 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
