30 ஆண்டுகளுக்கு பின்னர் நகர தொடங்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை
உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என்று அறியப்படும் A23a, பனிப்பாறையானது 30 ஆண்டுகளுக்கு பின்னர் நகர்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நகர்வும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நகரத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லண்டனில் உள்ள கிரேட்டர் நகரை விட இருமடங்கு பெரிய அளவிலும், சுமார் ஒரு டிரில்லியன் தொன் எடையுள்ள இந்த பனிப்பாறையானது1986 ஆம் ஆண்டு அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து உடைந்துள்ளது.
ஓர்க்னி தீவுகள்
அன்றிலிருந்து, வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் கடலின் அடிப்பகுதி சேற்றில் சிக்கிக் கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்குப் பெருங்கடலுக்குள் அண்டார்டிக் சர்க்கம்போலார் என்ற நீரோட்டத்தை பின்தொடர்ந்து இந்த பனிப்பாறை நகர்வதாக கூறப்படுகிறது.
இந்த நீரோட்டம் பனிப்பாறையை ஜோர்ஜியாவின் தெற்குப் பகுதியை ஒட்டி உள்ள துணை அண்டார்டிக் தீவை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் அங்கு வெப்பமான நீருடன் சந்திக்கும் A23a பனிப்பாறை இறுதியில் சிறிய பனிப்பாறைகளாக உடைந்து பின்னர் உருகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan