உலகின் முதல் வான் பாதுகாப்பு போர் கப்பல்! வெளியான காணொளி
ஈரானில் இராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முதல் மிகச் சிறிய வான்-பாதுகாப்பு படகை அந்த நாடு உருவாக்கியுள்ளது.
புரட்சிகர காவலர் கார்ப்ஸ் கடற்படையால் உள்நாட்டு பயன்பாட்டிற்காக ஈரான் தயாரித்த முதல் வகையான கப்பல் இதுவாகும் என கடற்படை ஆய்வாளரும் OSINT நிபுணருமான HI Sutton அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படகிற்கு'சுல்பிகார்-கிளாஸ்'என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING- IRAN reveals world’s first Air Defence Small Boat equipped with Nawab Short-range SAM System#IRAN #IRGC #missile #boat pic.twitter.com/eRfCrLfpsi
— EurAsian Times (@THEEURASIATIMES) March 10, 2023
பாதுகாப்பு போர் கப்பல்
ஈரான் ராணுவத்தில் உள்ள பல உபகரணங்களும் சுல்பிகார்-கிளாஸ்(Zulfiqar-class) என்ற பெயரில் இருப்பதால் குழப்பதை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இராணுவ படகு தனது செங்குத்து ஏவுகணை அமைப்பில் இருந்து குறைந்த தூர இலக்குகளை அடையும் நவாப் ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
In 2009 Iran got its hand on a British Bladerunner 51 fastboat
— Patarames (@Pataramesh) March 9, 2023
In 2023 Iran made a Bladerunner based fast-boat
➡️ The first air-defense fastboat in the world
Apparently with 5 x 4 = 20 Navab short-range VLS SAM
Likely with the previously known X-band AESA multifunction radar pic.twitter.com/qz1G2dCeFK
மேலும், படகில் பல செயல்பாட்டு AESA ரேடார் இருப்பதாக ராணுவ பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இது உலகின் முதல் வான் பாதுகாப்பு அமைப்பை கொண்ட படகு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
