உக்ரைனில் தொடரூந்து நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்கள்! 39 பேர் பலி. பலர் படுகாயம்! (Video)
உக்ரைனின் கிராமடோர்ஸ்க் தொடருந்து நிலையத்தில் ரஸ்ய படையினரின் இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் 39 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அந்த பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் போது 87 பேர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாக்குதலில் காயமடைந்த மொத்த எண்ணிக்கை குறித்து உக்ரைனில் இருந்து மாறுபட்ட புள்ளிவிவரங்கள் வெளிவருகின்றன,
ஜனாதிபதி ஸெலென்ஸ்கி 300 பேர் காயமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார
எனினும் குறித்த தொடரூந்து நிலையத்தின் மீது தாம் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஸ்யா தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் “ஆத்திரமூட்டல்" மற்றும் "முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது" என்று ரஸ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
உக்ரைனின் பல இடங்களில் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அண்மை நாட்களில் இடம்பெற்றபோதும் ரஸ்யா இதேபோன்று மறுப்புக்களை வெளியிட்டு வந்தது.