உடைக்கப்படும் உண்மைகள்! 50,000 குடும்பங்களின் எதிர்காலம் இனி புலம்பெயர் தமிழர்கள் கையில்..
இலங்கையில் கடற்றொழிலாளர்கள் விவகாரம் என்பது தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கையை நடத்துவதற்கு கூட உரிய படகுகள் இல்லைன்ற ஆதங்கமும் கவலையும் கடற்றொழிலாளர்கள் மத்தியில் உள்ளது.
இந்தநிலையில் கடற்றொழிலால் வரும் வருமானத்தால் வடக்கு- கிழக்கை முற்றாக அபிவிருத்தி செய்யலாம் என்று பிரித்தானியாவில் உள்ள இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
ஆனால் இதன் பாரிய பலனை இந்தியாவே எடுக்கின்றது. இந்த கடற்றொழிலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் புலம் பெயர் அமைப்பினர் யாரும் கடற்றொழிலாளர்களுக்கு உதவாத நிலை காணப்படுகின்றது.
ஈழத்தமிழர்கள் எல்லோராலும் ஏமாற்றப்படுகின்றார்கள்.
வடக்கு -கிழக்கில் 50,000ற்கும் மேற்பட்ட கடற்றொழில் குடும்பங்கள் உள்ளார்கள். அவர்களுக்கு புலம் பெயர் தேசத்தில் உள்ளவர்கள் ஏதாவது செய்தார்களா என்றால் இல்லையென்று கூறலாம் என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan