போதைப்பொருளால் அதிகரித்து வரும் உயிரிழப்புகள்! மறைமுக மாபியாக்களின் அதிரடி டீல்
போதைப்பொருள் என்பது இன்று சமூகத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது.
குறிப்பாக இளைஞர்களை இலக்காகக் கொண்டு செயல்படும் போதைப்பொருள் கும்பல்கள், புதிய வழிமுறைகள் மூலம் தங்களது வலையமைப்பை விரிவுபடுத்தி வருகின்றன.
சமீப காலங்களில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருவதாக பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. உடல்நல பாதிப்புகள், மனநல சிக்கல்கள் மற்றும் திடீர் உயிரிழப்புகள் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் புகைத்தல் பாவனையே எல்லாவிதமான போதைபொருள் பாவனைக்கும் ஆரம்பமான ஒன்றாக என்று மதுசாரம் மற்றும் போதைபொருள் தகவல் நிலைய நிகழ்ச்சி அதிகாரி நிதர்சனா செல்லதுரை குறிப்பிட்டார்.
இலஙகையில் சிகரெட் பாவனை சற்று குறைந்து வரும் நிலையில் சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் அழுத்தங்களை அரசாங்கத்திற்கு கொடுக்கின்றனர்.
அரசாங்கத்தினால் சிகரெட் கட்டுப்பாட்டு கொள்கைகள் வெளியிடப்படும் தருணத்தில் குறிப்பிட்ட நிறுவனங்கள் பல பொய்யான தகவல்களை வெளியிடுவார்கள்.
அரசாங்கத்தினால் பாதீடு வாசிப்பு இடம்பெறும் நேரங்களில் சட்டவிரோதமான சிகரெட்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளிவரும் என்று குறிப்பிட்டார்.
நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...
சர்ச்சைக்குரிய பல்லேகம தேரர் விவகாரம்! அஸ்டமஸ்தான குழுவின் அதிரடி முடிவு - நியமிக்கப்பட்டுள்ள புதிய தேரர்