ஐபிஎல் கிரிக்கெட்டில் பிரமிக்க வைக்கும் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 15 வயது இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி, ஒரு ஐ.பி.எல். சீசனில் பவர்பிளே ஓவர்களில் 500ற்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்த முதல் துடுப்பாட்டவீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்த சாதனையின் மூலம் சூர்யவன்ஷி தொடர்ந்து சாதனைகளை முறியடித்து வருகிறார்.
சர்ச்சைக்குரிய பல்லேகம தேரர் விவகாரம்! அஸ்டமஸ்தான குழுவின் அதிரடி முடிவு - நியமிக்கப்பட்டுள்ள புதிய தேரர்
சாதனை படைத்த சூர்யவன்ஷி
முல்லன்பூரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 2 போட்டியில் சூர்யவன்ஷி இந்த பிரமிக்க வைக்கும் சாதனையை நிகழ்த்தினார்.
இந்தப் போட்டியில் பவர்பிளே ஓவர்களில் 17 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்த சூர்யவன்ஷி, வழக்கத்திற்கு மாறாக மெதுவாக விளையாடினார்.
2016-இல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 467 ஓட்டங்கள் எடுத்த டேவிட் வோர்னர் , டிராவிஸ் ஹெட் (2024-இல் 402 ரன்கள்) மற்றும் சாய் சுதர்சன் (2025-இல் 402 ஓட்டங்கள்) ஆகியோர் இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி
ஒரு ஐ.பி.எல். தொடரில் 1 முதல் 6 ஓவர்களில் அதிக ஓட்டங்கள் 2026 இல் வைபவ் சூர்யவன்ஷி 521 ஓட்டங்கள் (ஸ்டிரைக் ரேட்: 233.63) 2016-இல் டேவிட் வார்னர் 467 ஓட்டங்கள் (ஸ்டிரைக் ரேட்: 150.16) 2024-இல் டிராவிஸ் ஹெட் 402 ஓட்டங்கள் (ஸ்டிரைக் ரேட்: 208.29) 2025-இல் சாய் சுதர்சன் 402 ஓட்டங்கள் (ஸ்டிரைக் ரேட்: 155.81) 2009-இல் ஆடம் கில்கிறிஸ்ட் 382 ஓட்டங்கள் (ஸ்டிரைக் ரேட்: 165.36)

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் நாணயசுழற்சியில் வென்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யவன்ஷி வழக்கத்திற்கு மாறாக ரன்குவிப்பில் வேகத்தை குறைத்த போதிலும், ஆட்டத்தின் கடைசி ஓவர்கள் வரை நிலைத்து நின்று 47 பந்துகளில் 96 ஓட்டங்களை விளாசினார்.
இதில் 8 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடங்கும். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்களை குவித்துள்ளது.
அரசின் முக்கிய அதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி.. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் நடந்த திடீர் பதவி விலகல்
சுப்மன் கில்- சாய் சுதர்சன்
ராஜஸ்தான் தரப்பில் சூர்யவன்ஷி தவிர்த்து ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில் 45 ஓட்டங்களும், ஃபெரரியா 11 பந்துகளில் 38 ஓட்டங்களையும் குவித்தனர்.
இதைத் தொடர்ந்து 215 ஓட்டங்களை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

போட்டி முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல். 2026 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வருகிற 29ஆம் திகதி நடைபெறுகிறது.
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan