ஜேர்மனில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பேரழிவில் உள்ள அதிர்ச்சி பின்னணி
ஜேர்மனியை புரட்டியெடுத்த கன மழைக்கு இதுவரை 180 பேர்கள் மரணமடைந்துள்ளதுடன், 170க்கும் மேற்பட்ட மக்கள் மாயமாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கனமழைக்கும் சில நாட்கள் முன்னரே இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் பொதுமக்களுக்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் உரிய நேரத்தில் குறித்த தகவல்கள் சென்றடையவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
பெடரல் அலுவலகத்திலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதை, அதன் தலைவர் அர்மின் ஸ்சுஸ்டெர் உறுதி செய்துள்ளார். மொத்தமாக 150 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும், மக்களும் உள்ளூர் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்றே அர்மின் ஸ்சுஸ்டெர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இருப்பினும், எந்த இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அரை மணி நேரத்திற்கு முன்னால் கணிக்க இயலாது என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,