உலகத்தலைவர்களை முகம் சுழிக்கவைத்த ட்ரம்பின் உரை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கடுமையான வரிகளால் உலக தலைவர்களை விமர்சித்தமை கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.
“தனது வரி விதிப்பில் பீதியடைந்த உலகத் தலைவர்கள் வரிகளைக் குறைக்கும் முயற்சியில் எனது ஆசன பகுதிக்கு முத்தமிடுகிறார்கள்' என்று முகம் சுழிக்கும் விதமான கருத்தை பதிவு செய்துள்ளார்.
ட்ரம்பின் வரி கொள்கையானது கடுமையான சந்தை இழப்புகள் மற்றும் சர்வதேசத்தில் பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
சீனா
இதில் குறிப்பாக சீனாவுக்கு 104 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், வியட்நாம் ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமு ட்ரம்பை சந்தித்துள்ளார்.
மேலும், தென் கொரியாவின் தற்காலிக ஜனாதிபதியும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ட்ரம்பை ஓவல் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
மருந்து இறக்குமதி
இந்நிலையில், மருந்து இறக்குமதி துறையில் விரைவில் பெரிய கட்டணங்களை அறிவிப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
"நான் என்ன செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் என்ன செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும், நான் என்ன செய்கிறேன் என்பதும் உங்களுக்குத் தெரியும்.
அதனால்தான் நீங்கள் எனக்கு வாக்களித்தீர்கள். மற்ற நாடுகளைப் பற்றிப் பேசுவதற்கு அவசியமில்லை” என ட்ரம்ப் விளக்கமளித்தார்.
பல நாடுகள் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.
🇺🇸TRUMP: THESE COUNTRIES ARE CALLING US UP, KISSING MY ASS
— NEXTA (@nexta_tv) April 9, 2025
That's what Donald Trump said about the countries on which the US imposed tariffs.
💬"Please, sir, make a deal.
I'll do anything.
I'll do anything, sir". pic.twitter.com/RMWkDgS5eZ