இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய இயற்கை ஊதா நிற நட்சத்திர நீலக்கல் அறிமுகம்
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய இயற்கை ஊதா நிற நட்சத்திர நீலக்கல்(Purple Star Sapphire) ஒன்று, உலகளாவிய அறிவியல் மற்றும் பண்பாட்டு பதிவுகளில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது உலகிலேயே இதன் வகையில் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய ரத்தினக்கல் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊதா நிற நட்சத்திர நீலக்கல்
“ஸ்டார் ஆஃப் பியூர் லேண்ட்” (Star of Pure Land) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரத்தினக்கல், 3,536 கரட் எடையைக் கொண்டதாகும்.

இது கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடக விளக்கக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவின் Gemological Institute of America (GIA) நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டுள்ள இந்த ரத்தினக்கல், இலங்கை (சிலோன்) தோற்றம் கொண்டது என்பதை Lanka Gemological Laboratory தனித்தனியாக உறுதிப்படுத்தியுள்ளது.
ரத்தினக்கல் நிபுணர்கள் கூறுகையில், இந்த கல் அதன் மேற்பரப்பில் தெளிவாகப் புலப்படும் ஆறு கதிர்கள் கொண்ட நட்சத்திர விளைவு (Asterism) காரணமாக தனித்துவம் பெறுகிறது.
வரலாற்று முக்கியத்துவம்
வட்ட வடிவ கபோஷான் (Cabochon) வெட்டுமுறை, அதன் மிகப்பெரிய அளவு, தெளிவு மற்றும் நிறம் ஆகியவற்றின் இணைப்பால், இதுவரை பதிவாகியுள்ள உலகின் மிகப்பெரிய வட்ட வெட்டப்பட்ட இயற்கை ஊதா நிற நட்சத்திர நீலக்கல் இதுவே என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நீலக்கல் கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடந்த இயற்கை புவியியல் செயல்முறைகளின் விளைவாக உருவானது என்றும், இதனை செயற்கையாக உருவாக்கவோ அல்லது மீண்டும் தயாரிக்கவோ இயலாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இத்தகைய ரத்தினக்கல் உருவாக தேவையான சூழ்நிலைகள் மிகவும் அரியவை என்றும் கூறப்பட்டுள்ளது.
அறிவியல் மதிப்பைத் தாண்டி, இந்த ரத்தினக்கல் ஒரு பண்பாட்டு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பொருளாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல் பரிமாற்றம்
அறிவியல் உறுதிப்படுத்தல், புவியியல் பின்னணி மற்றும் நீண்டகால பண்பாட்டு ஆவணப்படுத்தல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் கட்டமைப்பில் இந்த நீலக்கல் முதன்முறையாக இடம் பெற்றுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Star of Pure Land ரத்தினக்கல்லின் பராமரிப்பு பொறுப்பு தற்போது அமெரிக்காவில் உள்ள Tucson Masterpiece Gem Society அமைப்பின் கீழ் உள்ளது. இந்த அமைப்பு பாதுகாவலர் (Stewardship) முறையில் ரத்தினக்கல்லை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது.
இதன் அறிமுகம், ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல் மற்றும் பொறுப்பான பொது தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் Star of Pure Land Project என்ற திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
தொழில்முறை ஆய்வு
இந்த ரத்தினக்கல் தனியார் பாதுகாவல் நிர்வாகத்தில் இருந்தாலும், அதன் அறிவியல், பண்பாட்டு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையிலான எதிர்கால உரிமை அமைப்பை நோக்கி முன்னெடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் நடைபெற்ற இந்த விளக்கக் கூட்டத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள், அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் பண்பாட்டு பிரதிநிதிகள் நேரிலும் ஒன்லைனிலும் கலந்து கொண்டனர்.
இந்த ரத்தினக்கல் தொடர்பான முழுமையான அறிவியல் ஆவணங்கள் நிரந்தர பதிவுகளாக பராமரிக்கப்படுவதுடன், நிறுவப்பட்ட நடைமுறைகளின் கீழ் கல்வி மற்றும் தொழில்முறை ஆய்வுகளுக்காக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam