உலக சுகாதார மையத்தின் இலங்கைக்கான உதவி
2025 நவம்பர் 28 அன்று நாட்டை தாக்கிய டித்வா சூறாவளியின் பேரழிவு தாக்கத்தைத் தொடர்ந்து, இலங்கையில் அத்தியாவசிய சுகாதார சேவைகளை வலுப்படுத்த உலக சுகாதார அமைப்பு அவசரகால நிதியாக 175,000 டொலர்களை விடுவித்துள்ளது.
இந்த நிதி பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான அத்தியாவசிய சுகாதார சேவைகளை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.
சுற்றுச்சூழல் சுகாதார அபாயங்கள்
அத்துடன் நோய்ப் பரவலை முகாமைப்படுத்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான இலங்கைக்கான பிரதிநிதி ராஜே பாண்டவ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு,
விபத்துக்களுக்கான இடத்திலேயே சிகிச்சை, முதலுதவி, மருத்துவமனை பரிந்துரைகள்
மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன் மருத்துவத் தேவைகள், நீர் தரம், சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார அபாயங்கள் விடயத்திலும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |