இலங்கைக்கு வருகை தந்த உலக புகழ்பெற்ற பாடகர்!
உலக புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் எலோ பிளாக் ( Aloe Blacc) இலங்கைக்கு மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இவர் இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஜனாதிபதியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சிரேஸ்ட ஆலோசகர், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரியவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
புகழ்பெற்ற பாடல்கள்
பாடகர் எலோ பிளாக் அமெரிக்காவில் கிராமி விருதுகளுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களில் பிரதான பங்கை வகிக்கிறார்.
அத்துடன் இவர் பல புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ளார்.
இலங்கையில் சுகாதாரத் துறையில் முதலீட்டுத் திட்டத்தைத் ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக எலோ பிளாக் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியக அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி எப்போது தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு ஒரு சிறுவன் வந்து என்னிடம்... நடிகை சுஜாதா ஓபன் டாக் Cineulagam
