ரஷ்ய ஜனாதிபதி புட்டினை கைது செய்ய பிடியாணை உத்தரவு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போர்க் குற்றச் செயல்
புட்டின் பாரியளவில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் சிறுவர்களை சட்டவிரோதமான முறையில் ரஷ்யாவிற்கு நாடு கடத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ம் திகதி முதல் உக்ரைனில் இழைக்கப்பட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடாபில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவின் சிறுவர்கள் உரிமைகளுக்கான ஆணையாளர்
உக்ரைன் மீதான படையெடுப்பின் போது போர்க் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என ரஷ்யா திட்டவடட்மாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் சிறுவர்கள் உரிமைகளுக்கான ஆணையாளர் மாரியா லோவா பெலோவாவிற்கு எதிராகவும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த பிடியாணை உத்தரவுகள் அர்த்தமற்றவை என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
May you like this Video