இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி - உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் உலகப் பொருளாதார மன்றம் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய நெருக்கடியின் அறிக்கையை உலகப் பொருளாதார மன்றம் காணொளியாக வெளியிட்டுள்ளது.
பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான நிதி நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்காக பொதுத்துறை ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
பெற்றோல் நிலையங்களில் நேரத்தை கழிக்கும் மக்கள்
எரிபொருள், உணவு மற்றும் மருந்து போன்ற முக்கியமான இறக்குமதிகளுக்கு பணம் செலுத்துவதற்கு நாடு போராடுவதால், தொழிலாளர்களை விவசாயம் செய்ய ஊக்குவிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டின் மக்கள் தொகையில் பலர் பல மணிநேரம் பெற்றோல் நிலையங்களில் வரிசையில் நிற்கிறார்கள் மற்றும் பல மாதங்களாக நீண்ட மின்வெட்டை சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்டு முழுவதும் அத்தியாவசிய இறக்குமதிகளைச் சந்திக்க இலங்கைக்கு குறைந்தபட்சம் 5 பில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதார மன்றம் ஜெனீவா நகரை மையமாக கொண்ட ஒரு பொதுநலசேவை அமைப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
Does your country have farming Fridays?
— World Economic Forum (@wef) June 16, 2022
Learn more: https://t.co/r4WfnPkGaO pic.twitter.com/Bckz16qYlR