பிரித்தானியா - அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளுக்கு காத்திருக்கும் நெருக்கடி (VIDEO)
உக்ரைன் - ரஷ்ய போர் காரணமாக பிரித்தானியா, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கடந்த செப்டெம்பர் மாதம் பிரதமராக பதவியேற்ற லிஸ் ட்ரஸ் கடும் நெருக்கடி காரணமாக பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடும் பணவீக்க நெருக்கடியில் சிக்கியுள்ள பிரித்தானியாவில் இனி நிதியமைச்சராக யார் நியமிக்கப்பட்டாலும் நாட்டை கட்டியெழுப்புவதென்பது பெரும் பிரச்சினையாகவே மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,பிரித்தானியாவை போன்று அமெரிக்காவும் போர் காரணமாக கடும் பணவீக்கத்தினால் வட்டி விகிதங்களை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,