இலங்கையில் பொருளாதார நெருக்கடி: வெளியான அதிர்ச்சி தகவல்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பலரைத் தூக்கிட்டு தற்கொலைக்குக் கொண்டு சென்றுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன், அதிக வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வது முதல் குழந்தைகளுக்குக் குறைவாக உணவளிப்பது வரை, இந்த நெருக்கடியானது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தியதால், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து குடும்பங்களையும் தாக்கியுள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய இளைஞர்களும் தங்களின் செலவுகளைச் சமாளிக்கப் பொருத்தமான வேலைவாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டை விட்டு வெளியேறப் பலர் ஆவலுடன் காத்திருக்கும்போது, தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் உணவளிக்க நாட்டிலேயே தங்க விரும்புபவர்களும் உள்ளனர்.
ஆங்கில செய்தித்தாள்
இந்தநிலையில், சம்பாதிப்பதற்காக சில குடும்பங்கள் பயன்படுத்தும் சமீபத்திய உயிர்வாழும் முறை பாலியல் தொழிலாகவும் மாற்றம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகமான பெண்கள் இந்த தொழிலில் ஈடுபடும் அதே வேளையில், 20 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்ற தகவலையும் இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து கடந்த சில மாதங்களுக்குள், அதிகமான ஆண்கள் 'ஆண் பாதுகாப்பு' சேவைகளை வழங்கும் இணையத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.
பாலியல் சேவைகளை
பல்வேறு நாடுகளிலிருந்து பாலியல் நோக்கங்களுக்காகப் பரந்த அளவிலான ஆண்களை வழங்குவதற்காக வெளிநாடுகளிலிருந்து இந்த இணையத்தளங்கள் செயல்படுகின்றன என்றும் ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
ஆண்களோ அல்லது பெண்களோ பாலியல் சேவைகளை வழங்கும் இணையத்தளங்களைச் செயற்படுத்துவது சட்டவிரோதமானது.
எனினும் சட்டப்பூர்வ பணப்பரிமாற்றம் இல்லாததால் இந்த வர்த்தகத்தை இலகுவாக அடையாளம் காண முடியானதுள்ளது என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
