செஸ் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கார்ல்சென் வெற்றி
உலகக் செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் நோர்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார்.
இறுதி வரை போராடி, டை பிரேக்கர் சுற்றில், இரண்டு முறையும் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்ததன் மூலம் மேக்னஸ் கார்ல்சன் வெற்றியை தனதாக்கிகொண்டுள்ளார்.
எனினும் தமிழக வீரரான பிரக்ஞானந்தாவின் திறமைக்கு இந்திய பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிடே உலகக் கோப்பை செஸ் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் டைபிரேக்கர் சுற்று அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இதன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.
போட்டியின் முதலாவது சுற்று 35 வது நகர்த்தலின் பின் சமநிலையில் முடிந்தது.
இறுதிப்போட்டியின் 2-வது சுற்று
இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் ஒன்றரை மணி நேரத்தில் 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை சமநிலையில் முடிக்க ஒப்புக் கொண்டனர்.
இதன்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. சமநிலையில் ஆட்டம் முடிவுற்றதன் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது.
டைபிரேக்கர் சுற்று
இரு ஆட்டத்தையும் சேர்த்து இரு வீரர்களும் 1-1 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமநிலையில் உள்ளனர்.
இதனை தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய இன்று டைபிரேக்கர் ஆட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் டைபிரேக்கர் சுற்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.