திருகோணமலை குளங்களிற்கு விஜயம் செய்த உலக வங்கியின் பிரதிநிதிகள் (Photos)
உலக வங்கியின் நிதி உதவியுடன் திருகோணமலை மாவட்டத்தில் புனரமைக்கப்பட்டு வரும் குளங்களை பார்வை இடுவதற்காக உலக வங்கியின் பிரதிநிதிகள் திருகோணமலைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விஜயத்தை இன்றையதினம் (01.06.2023) மேற்கொண்டுள்ளனர்.
உலக வங்கியின் நிதி உதவியுடன் கால நிலைக்கு சீரமைவான நீர் பாசன விவசாய திட்டம் என்ற திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ- கோமரங்கடவல மற்றும் பதவிசிறிபுர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திட்டத்தின் பிரதி திட்ட பணிப்பாளர் டொக்டர் ஆரியதாச தெரிவித்தார்.
கண்காணிப்பு குழு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் 29 குளங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 குளங்களும், அம்பாறை மாவட்டத்தில் 20 குளங்களும் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதாகின்றன.
காலநிலைக்கு சீரமைவான நீர் பாசன விவசாய திட்டத்தின் கீழ் நீர் முகாமைத்துவத்திற்கான விவசாய குழு, குறித்த அபிவிருத்தி திட்டங்களை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளதுடன் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு மானிய அடிப்படையிலான மோட்டார் பம்ப் மற்றும் விதைகள் விவசாயத்திற்கான பாதுகாப்பு வளைகள் விவசாய உபகரணங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் நன்றி
இதேவேளை இத்திட்டத்தின் ஊடாக விவசாயிகளான எமக்கு இரண்டு தடவைகள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட முடியும் எனவும் இப்புணரமைப்பு திட்டமூடாக விவசாயிகள் பலர் நன்மைகளை பெறுவதாகவும் கிராம விவசாயிகள் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டங்களை பார்வையிடுவதற்காக உலக வங்கியின் பிரதிநிதிகளான சேவ் சலாவ் (SHEU SALAU) உலக வங்கியின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ். மனோகரன் சியாப் திட்டத்தின் பொறியியலாளர் பண்டார ராஜ கருணா மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ நிபுணர் ஜீ. சுஜீதரன் ,மாகாண நீர் பாசன திணைகள் அதிகாரிகள், விவசாய சேவைகள் திணைகள அதிகாரிகள், அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










