இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் உலக வங்கியின் கணிப்பு
நாட்டின் பொருளாதாரம் 2023இல் 3.8 சதவீத எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
எனினும் இந்த வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த உலக வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் பொருளாதார வளர்ச்சி
அதில் மேலும், நாட்டின் பொருளாதாரம் இந்த வருடத்தில் 1.7 வீதமாகவும் 2025ஆம் ஆண்டில் 2.4 வீதமாகவும் வளர்ச்சியடையும் என உலக வங்கி கணித்துள்ளது.
அத்துடன் 2022 - 2023 நிதியாண்டில் இலங்கையின் உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், தனியார் கடன் வழங்குநர்களுடன் இலங்கைக்கான கண்ணோட்டம் நிச்சயமற்றதாகவே உள்ளது என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
