இலங்கைக்கு உலக வங்கியினால் வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்
கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, உலக வங்கி அவசர ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளது.
இலங்கை உள்ளிட்ட நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகள் உடனடியாக கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் (David Malpass ) இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
இணைந்து செயற்படுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பங்களுருவில் நடைபெற்ற ஜீ20 மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சிக்கல் மிகுந்த விடயங்கள் தொடர்பில் அனைத்து தரப்பினரதும் உள்ளீடுகளையும் கரிசனைகளையும் கருத்திக் கொண்டு தீர்வுத் திட்டங்களை எட்டுவதே சிறந்த வழி என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.