உலக உடற்பருமன் எதிர்ப்புத் தினம்: தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஆரம்பம் (Photos)
உலக உடற்பருமன் எதிர்ப்புத் தினத்தை (National Anti-Obesity Day) தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் றெமான்ஸால் ஆரம்பித்து வைத்துள்ளார்.
நேற்றைய தினம் (04.02.2023) காலை ஆரம்பிக்கப்பட்ட இத்தினம், எதிர்வரும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் நடைபெறும் இந்த நிகழ்வில், உடற்பருமன் பற்றிய விழிப்புணர்வு, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம், உடற் திணிவுச் சுட்டி அளவிடல், உடற்பயிற்சியின் நன்மைகள் போன்றவை தொடர்பான கண்காட்சி, விழிப்புணர்வு ஊட்டும் செயற்பாடுகள், தெளிவூட்டல்கள் போன்றவற்றை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் வழங்கி வருகின்றார்கள்.
'உடற்பருமன் பற்றிக் கதைப்போம்' என்னும் தொனிப்பொருளில் நடைபெறும் இந்த
நிகழ்வில் அனைவரையும் பங்குகொண்டு பயன்பெற்று ஆரோக்கியமாக வாழுமாறு
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சமூகம் தெரிவித்துள்ளது.










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
