இணைய வழி பாவனை மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான செயலமர்வு
திருகோணமலையில் இணைய பாவனை மற்றும் அது தொடர்பிலான பாதுகாப்பு தொடர்பிலான சமூக மட்ட சிவில் அமைப்புக்களுக்கான செயலமர்வொன்று நடைபெற்றுள்ளது.
இந்த செயலமர்வானது திருகோணமலை சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
செயலமர்வு
டிஜிட்டல் ஜனநாயக முயற்சிகள் ஊடாக CIVICUS மற்றும் சேர்வின்ங் ஹியுமனிட்டி பவுண்டேசன் இணைந்து நடாத்திய குறித்த நிகழ்வில் இணைய பாவனை,இணைய குற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பான விளக்கங்களை விரிவுரையாளராக கலந்து கொண்ட கிண்ணியா வலயக் கல்வி அலுவலக தகவல் தொழில் நுட்ப உத்தியோகத்தர் ரிஸ்வான் முன்வைத்தார்.
இதில் குறித்த சேர்வின்ங் ஹியுமனிட்டி பவுண்டேசனின் பொது செயலாளர் ஏ.எம்.முர்ஷித், திட்ட உத்தியோகத்தர் ஐ.துவாரகா உட்பட சமூக சிவில் அமைப்புக்களை சேர்ந்த சுமார் 30 உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



