யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு
யாழில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டிருந்த நிலையில் இதனை சீரமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அல்லல்பட்டனர். குறிப்பாக க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
மின் தடைக்கான காரணம்
இந்த மின் தடைக்கு காரணம் மின் இணைப்புகளில் தூசி படிந்தமையே என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் படிந்த தூசியை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை மின்சார சபையினாரல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் நேற்றையதினம் (18.08.2026) வலிகாமம் மேற்கு பகுதியிலும் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

