கட்டுநாயக்க விமான நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்படாது
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்படாது என விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தவிசாளர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய 21 பணியாளர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் மூலம் இந்தப் பணியாளர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. நாள் தோறும் பணியாளர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கம்பஹா, மினுவாங்கொட மற்றும் ஜா-எல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில பணியாளர்களுக்கு நோய்த் தொற்று உறுதியான போதிலும் விமான நிலையத்தின் சேவைகள் இடைநிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கொவிட் நோய்த் தொற்று காரணமாக விமான நிலையம் பத்து மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்தது.
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri