கருவாட்டு கடையில் வேலை செய்ய வேண்டிய நிலைதான் ஏற்படும்: மாணவர்கள் ஆதங்கம் (video)
இலங்கையின் பொருளாதாரம் பாரிய சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தடையற்ற மின் வழங்கலிலும் நாட்டின் பொருளாதாரம் தாக்கத்தை செலுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் மின் துண்டிப்பு காரணமாக தற்போது க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றி வரும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின் தடை காரணமாக தாங்கள் பரீட்சைக்கு தேற்றுவதில் பல பிரச்சினைகள் ஏற்படுவதாக மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதற்கமைய நாடு போகும் போக்கில் தாம் எவ்வாறு முன்னேறுவது என மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியால் நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றது என கூறும் நிலையில் சுதந்திர தினத்திற்கு பல கோடி ரூபா செலவளிக்கப்படுகிறது என மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான நிலை தொடர்ந்தும் நிலவுமாயின் தாம் எதிர்காலத்தில் கருவாட்டு கடையில்தான் வேலை செய்ய வேண்டிய ஒரு நிலை ஏற்படும் என கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 39 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
