5 வீதிகளுக்கு ஒரு நாளில் அபிவிருத்தி செய்யும் பணி ஆரம்பம்
அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி - அஸ்ரப் நகர் பாதை 16.9 மில்லியன் ரூபா நிதியில் அபிவிருத்தி செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டதுடன் கல்முனை மருதமுனையில் பிரதேசங்களில் இரு வீதிகளும் நற்பிட்டிமுனையில் ஒரு வீதியுமாக மொத்தம் 5 வீதிகள் ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு வெள்ளப் பெருக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தீகவாபி - அஸ்ரப் நகர் பிரதான வீதி 16.9 மில்லியன் ரூபா நிதியில் அரசாங்கத்தினால் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இப்பாதை அபிவிருத்திக்கான ஆரம்ப வைபவம் தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளரும் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் இணைப்பாளருமான சுல்தான் சத்தார் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் வீதிப் புணரமைப்பு வேலைகளையும் ஆரம்பித்து வைத்தார்.









