முல்லைத்தீவில் மரக்காலை உரிமையாளர் மீது தாக்குதல்: சந்தேகநபர் கைது
முல்லைத்தீவு(Mullaitivu) - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை வீதி சிவநகர் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையில் பணிபுரியும் ஊழியரால் மரக்காலை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (28.04.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மல்லிகைத்தீவினை சேர்ந்த 35 வயதுடைய வேலுப்பிள்ளை வரதகுமார் என்னும் மரக்காலை உரிமையாளரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
பொலிஸ் விசாரணை
மரக்காலை உரிமையாளர் நேற்றையதினம் (27) குறித்த இளைஞனை இரவு வேளை வேலை செய்யுமாறு கூறியிருந்த நிலையில் இளைஞன் அதனை மறுத்ததையடுத்து உரிமையாளர் அவரை வெளியேற்றியுள்ளார்.
பின்னர் வெளியேறிய இளைஞன் மதுபோதையில் அதிகாலை மரக்காலைக்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்த உரிமையாளர் மீது தாக்குதலை நடாத்திவிட்டு அங்கிருந்த ஏனையவர்களை எழுப்பி உரிமையாளரை தாக்கிவிட்டேன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுங்கள் என கூறி தப்பித்து சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அதிரடியாக செயற்பட்ட புதுக்குடியிருப்பு பொலிஸார் சிலாவத்தை பகுதியில் வைத்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடைய மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த இளைஞனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபருக்கு உடந்தையாக செயற்பட்ட இளைஞர் ஒருவரையும் பொலிஸார் தேடி வருவதாக கூறியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
