மரப்பாலம் புத்தம்புரி பகுதியில் ஒருவர் கொலை
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரப்பாலம் புத்தம்புரி பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரப்பாலம் புத்தபுரி பகுதியை சேர்ந்த 04 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய கிரிஷ்ணபிள்ளை நேசராசா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
புத்தம்புரி பகுதியில் உள்ள பயிர்ச்செய்கை தோட்டத்தில் உள்ள காவலாளி தங்குமிட கொட்டகை முன் இவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு 07 மணியளவில் இடம்பெற்றட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக செங்கலடி கொம்மாதூரை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திறக்கு மட்டக்களப்பு குற்றத் தடவியவியல் பொலிஸார் வருகை தந்திருந்ததுடன் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிபதி வினோபா இந்திரன் வருகைதந்து சடலத்தை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
