20 ஆண்டுகளாக விநோத பழக்கத்தை கொண்ட பெண்
மெத்தைகளை உட்கொள்ளும் விநோத பழக்கத்தை கொண்ட அமெரிக்க பெண் ஒருவரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 வயதான ஜெனிபர் என்ற பெண்ணே இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த விசித்திர பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் 'என் விசித்திரமான போதை' என்ற நிகழ்ச்சியில் அண்மையில் அவர் கலந்துகொண்டார்.
பழக்கத்தை விடமுடியவில்லை
இதில் பேசிய பின்னரே அவரின் விநோதப் பழக்கம் வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது.
தனது 5 வயதில் இருந்தே மெத்தையை உட்கொள்வதை பழக்கமாக கொண்டிருப்பதாகவும், முதன் முதலில் கார் சீட்டில் இருந்த பஞ்சுகளை எடுத்து உட்கொள்ள ஆரம்பித்ததாகவும் ஜெனிபர் கூறியுள்ளார்.
குறித்த பழக்கத்தை விடமுடியவில்லை எனவும் ஒருநாளில் ஒரு சதுர அடி மெத்தையை உண்ணும் அளவுக்கு அடிமையாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உடல்நல பாதிப்பு இல்லை
ஒரு சமயம் தனது மெத்தை முழுவதையும் உட்கொள்ள முடித்த பின்னர், தனது தாயாரின் மெத்தையையும் உட் கொண்டு முடித்ததாகவும் ஜெனிபர் குறித்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
எனினும் ஜெனிபரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் எந்தவித உடல்நல பாதிப்புகளையும் இதுவரை ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதேசமயம், ஜெனிபருக்கு உடல் பருமன் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மெத்தையை உட்கொள்வதை நிறுத்தாவிட்டால், எதிர்பாராத உடல்நல பிரச்சினைகளுக்குள்ளாகலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
